பாகிஸ்தான் SI உளவாளிகளுக்கு வேலை பார்த்த இந்தியர்கள்: சிம் கார்டு வாங்கி கொடுத்த 5 பேர் கைது!
பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு இந்தியாவினுடைய சிம் கார்டை வாங்கி அனுப்ப உதவ முயற்சி ஐந்து இந்தியர்கள் கைது..
By : Bharathi Latha
அசாம் மாநிலம் அமைந்துள்ள 2 இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு மாவட்டங்களை சேர்ந்த அந்த 10 பேர் அதிரடியாக உணவுப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தற்பொழுது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. இந்த பத்து பேர் சேர்ந்து கும்பல் மோசடியாக சிம் கார்டுகளைப் பெற்று அவற்றை பாகிஸ்தானின் உளவாளிகளுக்கு விநியோகித்து வருவதாக அஸ்ஸாம் போலீசாருக்கு உளவு தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
அதன் பெயரில் அவர்கள் அந்த 10 பேரையும் கைது செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். இரண்டு மாவட்டங்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள் அதில ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மீது இருக்கும் நபர்கள் தலைவர் ஆகிவிட்டதாகவும் காவல்துறை சார்பில் தற்பொழுது தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களுடைய வீடு வீடுகளில் இருந்து மொத்தமாக 18 செல்போன், 136 சிம் கார்டுகள் மற்றும் கைவிரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் உயர் தொழில்நுட்ப சி.யு.பி பிறப்பு சான்றிதழ் பாஸ்போர்ட் புகைப்படம் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதில் ஆஷிக்குள் இஸ்லாம் பாதுகாப்பு தகவல்களை ஒரு வெளிநாட்டு தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்திய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News 18