ஸ்டிக்கர் திட்டங்கள்: மத்திய அரசின் கோல்டன் ஹவர் திட்டத்தை, "நற்கருணை வீரன்" என பெயர் மாற்றிய ஆளும் அரசு!
By : Kathir Webdesk
கடந்த மார்ச் 22 அன்று சட்ட சபையில் பேசிய ஸ்டாலின், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும்-48 என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம்-உதவி செய் என்ற 5 அம்சத்திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுவந்து அனுமதித்து, உயிரை காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என்றார்.
உண்மையான திட்டம்
இது கடந்த ஆண்டே மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உதவிபுரியும்நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கும் திட்டத்தை மத்தியசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்தது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவசரகால உதவியை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒருவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அப்போது கூறப்பட்டது. இந்த திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி தமிழக அரசு தன் திட்டம் போல அறிவித்தது.