ராஜஸ்தான் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி: காங்கிரஸ் சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய அலட்சிய பதில்!
ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி, தொற்று நோயால் இறந்ததாக அலட்சியமாக பதில் கூறிய காங்கிரஸ் சுகாதாரத்துறை அமைச்சர்
By : Bharathi Latha
ராஜஸ்தானில் சிரோஹி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை அக்கிராமத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை குடித்ததால் ஏழு குழந்தைகளும் மர்ம நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் இறப்பு பற்றி ராஜஸ்தான் நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல் இருப்பதும் அங்குள்ள கிராம மக்களே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, உள்ளூர் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் கவர்களில் விற்கும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகள் முன்னாள் இரவு குடித்ததை அடுத்து மறுநாள் காலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த குளிர்பான பருகிய குழந்தைகள்தான் இறப்புக்கு கூறியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மாநில அளவிலான மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பதலிளித்த ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரசாதி லால் மீனா கூறுகையில், இந்த சம்பவத்தின் மருத்துவ விசாரணையில் குழந்தைகளின் மரணங்கள் வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டதாகவும், குளிர் பானங்களை உட்கொண்டதால் அல்ல என்று தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார் எனவே அமைச்சரின் இந்த அலட்சியமான பதில் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy:Malaimalar News