Kathir News
Begin typing your search above and press return to search.

50 நாட்களில் 80 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை - என்ன செய்தது தமிழக அரசு?

இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவர்களுக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

50 நாட்களில் 80 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை - என்ன செய்தது தமிழக அரசு?
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 May 2022 1:00 PM IST

இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவர்களுக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக அங்குள்ள மக்களுக்கு விலைவாசி உயர்ந்து பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் அன்றாட வாழ்க்கைக்கு பொருட்கள் சரிவர கிடைக்காத அவல நிலையும் தொடர்கிறது. எரிபொருள் கிடைப்பதில் பிரச்சினை, சமையல் எரிவாயு கிடைப்பதில் பிரச்சினை, பால்பொருட்கள் கிடைப்பதில் பிரச்சினை என்பது போன்ற பல பிரச்சினைகள் நிலவும் தேசத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு கடல் மூலம் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இன்று காலையில் கூட இலங்கையை சேர்ந்த 5 தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை பகுதியில் வந்து இறங்கி உள்ளனர். அவர்களை மரைன் போலீசார் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 45 முதல் 50 நாட்கள் காலகட்டத்தில் 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். இன்று காலை வந்த 5 நபர்களுடன் சேர்த்து 80 பேர் அகதிகள் தமிழகம் வந்துள்ளார்கள் இலங்கையில் இருந்து.

இலங்கைக்கு உதவ அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் இதுவரை தமிழகத்திற்கு வந்து உள்ள 75 அகதிகளுக்கு என்ன செய்தார் அவர்களுக்கான இருப்பிடம் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கான உணவு பொருள் துணிமணி போன்றவை அரசாங்கத்தால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் இதற்கு மேலும் தமிழகத்தில் வாழ வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அவர்களுக்கு இங்கே அகதிகளாக வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

இங்கிருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்புவதில் மும்முரம் காட்டும் தமிழக அரசு இலைகையில் இருந்து வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு இதுவரை வந்த 80 பேரின் வாழ்வாதாரத்திற்கும், அன்றாடத் தேவைகளுக்கும் என்ன செய்வோம் என அறிவிக்காமல் உள்ளது புதிராகவே உள்ளது. இது குறித்த வெள்ளை அறிக்கை அரசால் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இலங்கையில் தற்பொழுது இந்த பிரச்சினை எப்போது முடிவடையும் தெரியாத நிலையில் இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலகட்டங்களில் அகதியாக வருபவர்களுக்கு என்ன செய்ய இருக்கிறோம் என்பதையும் குறித்தும் தி.மு.க அரசு இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News