இந்து மத சடங்கை அவமதித்த அமீர்கான் - சர்ச்சையாகும் விளம்பரம்
இந்து மத சடங்கை அவமதித்துள்ளார் என அமீர்கான் நடித்த விளம்பரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
By : Mohan Raj
இந்து மத சடங்கை அவமதித்துள்ளார் என அமீர்கான் நடித்த விளம்பரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அமீர்கான் வங்கி விளம்பரத்தில் தற்போது நடித்துள்ளார்.அந்த விளம்பரத்தில் இந்து மத சடங்குகளை அவமதித்துவிட்டார் என பலரும் அவர்களுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர்.
அந்த விளம்பரத்தில் இந்து மத முறைப்படி திருமணம் ஆன மணமகனும், மணமகளும் சொந்த வீட்டுக்கு வருகின்றனர். புதுமண தம்பதி வீட்டுக்குள் வரும்போது முதலில் மணமகள் வலது காலை எடுத்து வைத்து வருவது பழக்கம் ஆனால் இந்த விளம்பரத்தில் மணமகளான அமீர்கான் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வருகிறார் இதுதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து பல தரப்பினரும் அமீர்கான் இந்து மத சடங்கை அவமதித்துவிட்டார் எனவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இது குறித்து தனது எதிர்ப்பை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார்.