Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கான்: அடுத்தடுத்து குண்டுவெடிப்பு, அங்கு என்ன தான் நடக்கிறது ?

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கான்: அடுத்தடுத்து குண்டுவெடிப்பு, அங்கு என்ன தான் நடக்கிறது ?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Sept 2021 7:14 PM IST

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தலிபான்களிடம் சென்றுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்களின் பொருளாதார நிலை தற்போது மோசமானது. ஆப்கனில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என்று UNESCO அமைப்பு அதிர்ச்சி தகவல்களை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இத்தகைய ஒரு சூழலில்தான் அங்கு தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.


இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஒரு பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன. இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவார்.


மற்றவர்கள் எல்லாம் தலிபான் போராளிகள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தலிபான்களின் மையமாக வைத்து நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவது வேதனைக்குரியது. அந்நாட்டில் தலீபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவாகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:timesofindia





Next Story
கதிர் தொகுப்பு
Trending News