ஆப்கான் பெண்களின் கல்விக்காக ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கும் சிறுமியின் வீடியோ !
ஆப்கானிய பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானில் தற்போது முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளில் பெண்களில் ஒதுக்குகிறார்கள். அதிலும் குறிப்பாக கல்வி தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஆண்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் பெண்களுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் அவர்கள் வீட்டிலிருந்து வீட்டு வேலை செய்வதுதான் நல்லது என்பது போன்ற அறிவுரைகளை ஏற்கனவே தலிபான்கள் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ஆப்கானிய சிறுமியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறுமியின் குரல் தான் தற்பொழுது ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. அந்த வீடியோவில், ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் தாலிபான்களுக்கு சவால் விடுத்து, தனது கல்வியைத் தொடரக்கோரி தைரியமாகப் பேசியதால் அவருடைய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் சிறுமி கூறுகையில், "நான் ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவள். நான் சாப்பிடவும், தூங்கவும், வீட்டில் இருக்கவும் பிறக்கவில்லை. நான் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில் உள்ள எந்தவொரு பெண்ணும் கல்வி பெறவில்லை என்றால், நமது அடுத்த தலைமுறை எப்படி நல்ல முறையில் நடந்துகொள்வார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அந்த பெண், எங்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால், இந்த உலகில் எங்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது" என்பது போன்ற கனத்த குரலில் அவர் கூறும் வார்த்தைகள் அனைவர் மனதையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
Input & Image courtesy:India Today