Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் ஆப்கானிஸ்தான் மக்கள் ! #SanctionPaksitan #TwitterTrend

ஆப்கானிஸ்தானில் IEDகளில் பயன்படுத்தப்படும் 96% வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் ஆப்கானிஸ்தான் மக்கள் ! #SanctionPaksitan #TwitterTrend
X

Saffron MomBy : Saffron Mom

  |  11 Aug 2021 12:15 AM GMT

#SanctionPakistan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் சமீபத்தில் பிரபலமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து வரும் உள்நாட்டுப் போரில், தலிபான்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக தடை விதிக்க (sanction), ஆப்கன்கள் ட்விட்டரில் கோரி வருகின்றனர். களத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது.



தீவிரமடைந்து வரும் தலிபான் தாக்குதலுக்கு மத்தியில், நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளைத் தகர்த்து, ஆப்கானிஸ்தானை மீண்டும் கொடுங்கோலாட்சி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படுகுழியில் இப்போர் தள்ளிவிடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.

தலிபான்களை ஆதரிப்பதிலும் பலப்படுத்துவதிலும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்க்க #SanctionPakistan என்ற ஹாஷ்டாக்கை ஆப்கானிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

காபூலைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் எழுப்ப அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் IED வெடிகளில் பயன்படுத்தப்படும் 96 சதவிகித வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதாக மற்றொரு சமூக ஊடக பயனர் ட்வீட் செய்துள்ளார். இது உண்மையா என சரிபார்க்க இயலாது என்றாலும், ஆப்கானிஸ்தான் குடிமக்களிடையே பாகிஸ்தானைப் பற்றி உள்ள அபிப்ராயத்திற்கு இது மற்றொரு அடையாளமாகும்.



மற்றொரு சமூக ஊடக பயனர், ​​தலிபான்கள் பாகிஸ்தானின் மரணக் குழுவாக இந்தப் பிராந்தியத்தில் அமைதியை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



ஒரு ட்விட்டர் பயனர் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் நெருக்கடிக்கான காரணத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் பேரழிவுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் என்று அவர் கூறினார்.



ஆன்லைனில் மட்டுமல்ல, தலிபான்களுக்கு பாகிஸ்தான் வழங்கும் ஆதரவை எதிர்ப்பதற்காக உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் தெருக்களுக்கே ஆப்கானிஸ்தானியர்கள் வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் போரைத் தூண்டுவதில் பாகிஸ்தானின் நேரடித் தொடர்பிற்காக ஐக்கிய நாடுகள் சபை அந்நாட்டின் மீது தடைகளை விதிக்குமாறு ஸ்வீடனில் உள்ள ஆப்கானியர்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



கனேடிய தூதுவர் கிறிஸ் அலெக்சாண்டரும் ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவை வழங்கினார் மற்றும் பாகிஸ்தான் மீது தடைகளை விதிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்தார்.



ஆப்கானிஸ்தானில் நெருக்கடி அதிகரிக்கும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எழுச்சி கிடைப்பதாக ​​பல அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூறினர், ஆப்கானிஸ்தானில் பிரச்சினையை உருவாக்குவதில் பாகிஸ்தானியர்கள் முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறினர். இதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் சமீபத்தில், பாகிஸ்தானும் அதன் இராணுவமும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் துணை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக குற்றம் சாட்டினார். இது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்த தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் 'தலிபான் கான்' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார். பாகிஸ்தான் தலைமையும் தலிபானின் மூத்த தலைவர்களைச் சந்தித்து அவர்களைப் பாராட்டித் தள்ளியதாக கூறப்படுகிறது.


With Inputs From: OpIndia

Cover Image Courtesy: NewsIntervention.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News