Kathir News
Begin typing your search above and press return to search.

வெறும் 250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட் - மக்கள் பணத்தை கறியாக்கித் தள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்..!

After saying that they stand with the common man, INC leaders take private jets to travel just 250 KMs from Chandigarh to Delhi.

வெறும் 250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட் - மக்கள் பணத்தை கறியாக்கித் தள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்..!
X

MuruganandhamBy : Muruganandham

  |  23 Sep 2021 2:12 PM GMT

பஞ்சாப் முதல்வர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 4பேர் தனி விமானத்தில் பயணம் செய்தது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

பஞ்சாப் முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி தேர்வான பின்னர், சாதாரண நபரான தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றி தெரிவிக்க 250 கிமீ தொலைவில் உள்ள டெல்லிக்கு 4 காங்கிரஸ் தலைவர்களுடன் தனி விமானத்தில் பயணம் செய்திருக்கின்றனர். இந்த செயலை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி:

பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து திடீரென கடந்த வாரம் ராஜினாமா செய்தார் கேப்டன் அமரிந்தர் சிங். அவரைத் தொடர்ந்து புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதற்காக முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி, துணை முதல்வர்களான சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா, ஓபி சைனி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய நால்வரும் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்து டெல்லி சென்றுள்ளனர். சண்டிகரில் இருந்து டெல்லிக்கு 250 கிமீ தான் தொலைவு என்ற போதிலும் தனி விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயணம் செய்திருப்பதை எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.

உங்களால் காரில் அல்லது சாதாரண பயணியர் விமானத்தில் செல்ல முடியாதா? அல்லது காந்தி குடும்பத்தின் டெல்லி தர்பார் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறீர்களா?" என ஷிரோமணி அகாலி தளம் கட்சி தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News