Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவுக்கு சாதகமாக ட்வீட் போட்டு பிறகு டெலீட் செய்த காங்கிரஸ்!

பா.ஜ.கவுக்கு சாதகமாக ட்வீட் போட்டு பிறகு டெலீட் செய்த காங்கிரஸ்!
X

Saffron MomBy : Saffron Mom

  |  9 April 2021 1:57 AM GMT

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஏப்ரல் 8 அன்று பா.ஜ.க ஆட்சியில் குறைந்த பணவீக்கம் இருப்பதை காட்டி விட்டு, பிறகு பல கேலிகளுக்கு மத்தியில் டெலீட் செய்தது.


காங்கிரஸ் வெளியிட்ட ட்வீட்டில், தற்போதைய ஆட்சியின் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் உணவு வாங்கமுடியாது என்று குற்றம் சாட்டி பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கினர்.

அதனுடன் இணைந்த விளக்கப்படத்தில், ஏப்ரல் 2014 இல் UPA-2 ஆட்சியின் முடிவில் இருந்த உணவு வகைகளின் விலைகள் மற்றும் டெல்லியில் தற்போதைய உணவு விலைகள் குறித்து காங்கிரஸ் ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்தது.

மேற்கோள் காட்டப்பட்ட பொருட்களின் விலை கிலோ அல்லது லிட்டருக்கு ரூ 3 முதல் ரூ 17 வரை மட்டுமே உயர்ந்திருந்ததைக் குறிக்கும் கிராஃபிக், குறைந்த உணவு பணவீக்கத்தை நிரூபித்ததாக சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டினர்.

ரிசர்வ் வங்கி தற்போது ஆண்டுக்கு பணவீக்க இலக்கு 2 முதல் 6 சதவீதம் வரை 2016 இல் பரிந்துரைக்கிறது. அதிக பணவீக்கம் மற்றும் பணவாட்டம் இரண்டும் குறைந்த நுகர்வோர் வாங்கும் சக்திக்கு பங்களிப்பு செய்கின்றன, இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News