Kathir News
Begin typing your search above and press return to search.

70 ஹேர்பின் வளைவுகள் கொண்ட தமிழ்நாட்டு சாலை புகைப்படம்: பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா!

ஆனந்த் மஹிந்திரா அவர்கள் 70 ஹேர்பின் வளைவுகள் கொண்ட சாலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

70 ஹேர்பின் வளைவுகள் கொண்ட தமிழ்நாட்டு சாலை புகைப்படம்: பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Jan 2022 2:23 PM GMT

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபராக அறியப் படுபவர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள். அந்த வகையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா அவர்கள் ரீட்வீட் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் தமிழ்நாட்டின் நாமக்கல்லில் உள்ள கொல்லிமலைச் சாலையின் மூச்சடைக்கக்கூடிய வான்வழி புகைப்படம் தான் அது. இந்தியாவின் மிகவும் தைரியமான மலைப்பாதைகளில் ஒன்று என்று அழைக்கும் மலைகளில் 70 தொடர்ச்சியான ஹேர்பின் வளைவுகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.


நார்வே தூதரக அதிகாரியான எரிக் சொல்ஹெய்மின் சந்தை பற்றிய தொடர் பதிவு தமிழ்நாட்டில் உள்ள 70 தொடர்ச்சியான ஹேர்பின் வளைவுகளில் கொண்ட இந்த சாலையை பதிவிட்டுள்ளார். 70 தொடர்ச்சியான ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்தியாவின் மிகவும் தைரியமான மலைச் சாலைகளில் ஒன்று என்று எரிக் சொல்ஹெய்ம் கூறினார். இந்த பதிவால் ஈர்க்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா அதை மறு ட்வீட் செய்து, "எரிக் என் சொந்த நாட்டைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை எனக்குக் காட்டுகிறீர்கள். இது வெறும் தனிச்சிறப்பு. இந்தச் சாலையை யார் கட்டினார்கள்? என்பதை நான் கண்டுபிடிக்க விரும்புகிறேன். அதன் பிறகு என் தார் வாகனத்துடன் அங்கு செல்ல நான் விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த பதிவ சமூக வலைத்தளங்களை தற்போது வைரலாகி வருகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் கொல்லிமலைச் சாலை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹேர்பின் வளைவுகளுடன் எண்ணற்ற திருப்பங்களைக் கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 238 மீட்டர் உயரத்தில் காரவல்லியில் தொடங்குகிறது. ஏறுதல் 70 ஹேர்பின் திருப்பங்கள் வழியாக 20.4 கிமீ நீளமானது. சோலக்காடுவில் 1.198 மீட்டரில் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: India Today




Next Story
கதிர் தொகுப்பு
Trending News