Kathir News
Begin typing your search above and press return to search.

முப்படைத் தளபதி குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்ட வைரல் வீடியோ !

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துகொண்ட வீடியோ.

முப்படைத் தளபதி குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்ட வைரல் வீடியோ !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Dec 2021 2:00 PM GMT

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனிடையே, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு, உலக நாடுகள் பலவும் இரங்கல் தெரிவித்துள்ளன.


இந்தியாவில் உள்ள பல்வேறு தலைவர்களும் முப்படை தலைமை தளபதியின் மறைவிற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ ட்விட்டர் பயனாளிகளுக்கு இடையே ஒரு செய்தியை விட்டு சென்றுள்ளார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கி விண்ணுலகும் செல்வது போல் அது அமைந்துள்ளது.



இந்நிலையில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கை நதியில் கரைக்க அவர்களது குடும்பத்தினர் கரைத்து உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள். இதனிடையே தற்போது ட்விட்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Input & Image courtesy:India Today




Next Story
கதிர் தொகுப்பு
Trending News