ஆங்கிலத்தில் விளக்குவதை தமிழில் ஒருவரியில் கூறலாம்: ஆனந்த் மகேந்திராவின் தமிழ் அனுபவம்!
ஆங்கிலத்தில் கஷ்டப்பட்டு விளக்குவதை விட தமிழில் ஒரே வரியில் அதற்கு விளக்கம் கூறி விடலாம்.
By : Bharathi Latha
ஆனந்த் மஹிந்திரா அவர்கள் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர்தான் பார்க்கும் நேர்மறையான கருத்துக்கள் எண்ணங்கள் போன்றவற்றை தன்னுடைய சமூக வலைதளங்களில் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே அதற்காகவே இவருடைய ட்விட்டர் அக்கவுன்டை பின்தொடர்பவர்கள எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஆனந்த் மஹிந்திரா அவர்கள் பதிவிட்ட நேற்றைய ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக தமிழகத்தில் அது பெரும் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் தொழிலதிபர்களாக இருப்பவர்களுக்கு நகைச்சுவை உணர்வு சற்று குறைவாகத்தான் இருக்கும் என்று மக்கள் பொதுவாக நினைப்பார்கள். அதற்கு மாற்று விதமாக, ஆனந்த் மகேந்திரா அவர்கள் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் கூட தன்னுடைய நகைச்சுவை உணர்வை தன்னுடைய பதிவின் மூலம் அப்பொழுது அதை வெளிக்காட்டி வருகிறார். அதில் ஆங்கிலத்தில் நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை, தமிழில் நாம் எளிதாக சொல்லி விடலாம் என்பதைத் தான் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமில்லாமல் இந்த பதிவு குறித்து கமெண்ட்டில் ஒருவர் கேள்வி எழுப்பி கையில், நீங்கள் இதனுடன் சில தமிழ் கெட்ட வார்தைகளையும் நிச்சயம் கற்றுக் கொண்டிருப்பீர்களே? என கேட்டதற்கு, ஆனந்த் மஹிந்திரா நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். 'நிறையவே கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். சென்னையில், எனது கார் மீது யாராவது மோதுவது போல வந்தால், அவர்களை மனதுக்குள் திட்ட உபயோகிப்பேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy: Behindwoods