இந்திய பணத்தை அந்நிய நிறுவனங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதா? கூகுள் பே கட்டணம்! பே.டி.எம் ஃபிரீ!
இந்திய பணத்தை அந்நிய நிறுவனங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதா? கூகுள் பே கட்டணம்! பே.டி.எம் ஃபிரீ!
By : Muruganandham M
இந்தியாவில், 2021 ஜனவரி 1 முதல் UnifiedPayments Interface - UPI ஆப் பயன்பாட்டிற்கு 30 சதவிகித CAP கட்டணம் விதிக்க National Payments Corporation of India - NPCI முடிவுசெய்துள்ளது. எனினும், NPCI அமைப்பின் இந்த முடிவு, Paytm நிறுவனத்தை மட்டும் பாதிக்காது என்று கூறப்படுகிறது.
இதன்படி அமேசான், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்தி பணம் அனுப்புவோர் ஜனவரி முதல் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.முன்னதாக, கூகுள் பே நிறுவனம் தனது பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் பின்னர்இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மட்டுமே எனவும், இந்தியாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பின்வாங்கியது.
ஆனால், தற்போது, NPCI அமைப்பே கட்டண உயர்வை அறிவித்துள்ளது.எதிர்காலத்தில் Unified Payments Interface - UPI கட்டணமுறையில் மூன்றாம் தரப்பு ஆதிக்கத்தைத் தடுக்கவே, இந்த முடிவைஎடுத்துள்ளதாக NPCI கூறியுள்ளது.
இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் கூகுள்பே, போன் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக பணம் அனுப்பும் மற்றும் கட்டணம் செலுத்தும் நடைமுறை அதிகரித்தது. அரசும் அதை ஊக்கப்படுத்தியது. ஆனால் பர்வர்த்தனைகள் பெரும்பாலும், இந்திய தயாரிப்பு அல்லாத ஆப்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்திய ஆப்களை நோக்கி வர வைக்கும்.