Kathir News
Begin typing your search above and press return to search.

60 ஆண்டு கால பழமையான பொருட்களைப் பாதுகாக்கும் வித்தியாச மனிதர் !

சுமார் 60 ஆண்டு கால பழமையான பொருட்களை பாதுகாத்து வைத்துள்ள நபரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

60 ஆண்டு கால பழமையான பொருட்களைப் பாதுகாக்கும் வித்தியாச மனிதர் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Oct 2021 1:40 PM GMT

அனைவரும் வீடுகளில் புதிய, புதிய பொருட்களை வாங்கி அழகுபடுத்தப் விரும்புவார்கள். இவர் மட்டும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து உள்ளார். புதுச்சேரியை சேர்ந்த அய்யனார் என்ற நபர் பழங்கால பொருட்களைப் பாதுகாத்து வருகிறார். பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்கவும், அதன் அழிவை தடுக்கவும் பல ஆண்டுகளாக சேகரித்து வருகிறார். அந்த காலத்தில் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் முதல் கலை அலங்கார பொருட்கள் வரை சேகரித்து வைத்திருக்கிறார். குறிப்பாக 50 ஆண்டுகள் பழமையான பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களும் இவற்றில் அடங்கும்.


குறிப்பாக இவருடைய சேகரிப்பு பொருட்களில் கெட்டில்கள், குவளைகள், கண்ணாடிகள், பானைகள், குடங்கள், பெரிய பாத்திரங்கள், விளக்குகள் மற்றும் சிலைகள் போன்ற பொருட்களையும் வைத்திருக்கிறார். சிறுவயதில் வந்த ஆர்வம் காரணமாக இதனை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அய்யனார், நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சேமித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சின்ன வயதில் இருந்தே பழங்கால பொருட்களை சேகரிப்பேன். கிட்டத்தட்ட இத்தனை வருடங்களில் சேமித்து வைத்த பொருட்கள் என்னையே ஆச்சர்யப்படுத்துகிறது. நான் சேகரித்துள்ள பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை கண்காட்சி வைத்து மாணவர்களுக்கு காண்பித்து வருகிறேன். தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா அபாயத்தால் கண்காட்சி வைக்க இயலவில்லை. இனிமேல் தொடர்ந்து நடத்த வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பயன்படுத்திய பொருட்களை இன்று காணும்போது இன்றைய இளைஞர்களுக்கும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல பழங்கால பொருட்களை பார்க்கும் போது நம்முடைய வரலாறு, அதன் பண்புகள் என அனைத்தையும் உணர முடிகிறது. இதனால் அனைவராலும் எளிதாக வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. பழங்கால வரலாற்று பொருட்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதனால் நம்முடைய வரலாறு, நமக்கு பிறகு வரக்கூடிய சந்ததிகளுக்கு தெரியாமல் போகிறது. பழங்கால பொருட்கள் அழிக்கப்படுவதை தடுப்பதே எனது லட்சியம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:News 18



Next Story
கதிர் தொகுப்பு
Trending News