பழைய ATM மூலம் கிடைத்த ஒன்றரை லட்சம்: மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற வியாபாரி !
பழைய ATMகளை வாங்கி, விற்கும் வியாபாரி ஒருவருக்கு அதன் மூலம் சுமார் 1 இலட்சம் கிடைத்துள்ளது.
By : Bharathi Latha
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நமக்கு அடிக்காத வரை அதன் மீது பெரிதாக ஒன்றும் தோன்றாது. ஆனால், ஒருமுறை அடிக்கும்போது நம்மால் அதனை நம்பவே முடியாது. அப்படியான ஒரு நிகழ்வு பழைய எந்திரங்களை வாங்கி விற்பனை செய்யும் ஒருவருக்கு நிகழ்ந்து கொண்டு தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. பழைய ATM ATMகளை வாங்கி அவர் அதனை உடைத்து விற்பனை செய்யும்போது, பழைய ATM ஒன்றை 300 டாலருக்கு வாங்கியுள்ளார். அதனை உடைக்கும்போது பழைய ATMமில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
இது குறிப்பாக இந்திய மதிப்பில் 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் மூலம் ஒன்றை லட்சம் ரூபாய் கிடைத்து இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், பழைய ATMமை கொண்டு வந்து உடைக்க தொடங்குகின்றனர். அந்த ATMமின் சாவி தொலைந்துவிட்டதால், அதனை பழைய உரிமையாளர் விறபனை செய்துள்ளார். பணம் ஏதும் இருக்காது என்ற எண்ணத்தில் அவர் விற்பனை செய்துள்ளார்.
இதனை வாங்கிய அவர்கள் வழக்கம்போல் சுத்தி, உளி ஆகியவற்றைக் கொண்டு ATM இயந்திரத்தை உடைக்கின்றனர். அப்போது ATM மெஷினுக்குள் பணம் இருப்பதைக் கண்ட அவர்களால், ஆச்சர்யத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், கவனமாக மெஷினை உடைக்கின்றனர். முழுமையாக உடைத்தபிறகு அதில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது, அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம். ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்ற அவர்கள், அந்தப் பணத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
Input & Image courtesy:News 18