அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்டம் - கட்டுமானத்திற்கு குவியும் நன்கொடைகள்!
அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.

ராமர் கோவில் கட்டுமானம்:
அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறந்து விடப்படும் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானம் கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டை தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
50 சதவீத பணிகள் நிறைவு:
இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் ராமர் கோயிலில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்தம் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும்.
1,800 கோடி செலவு:
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அதனைத் தொடர்ந்து அதே மாதத்தில் ராமர் கோவில் பத்தர்களுக்கு திறந்து விடப்படும். கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News 18