Kathir News
Begin typing your search above and press return to search.

SDPIன் மாடு பலி கொடுக்கும் போராட்டம் - மனுநீதிச் சோழன் மண்ணில் நடக்கும் கொடுமை!

SDPIன் மாடு பலி கொடுக்கும் போராட்டம் - மனுநீதிச் சோழன் மண்ணில் நடக்கும் கொடுமை!

SDPIன் மாடு பலி கொடுக்கும் போராட்டம் - மனுநீதிச் சோழன் மண்ணில் நடக்கும் கொடுமை!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  28 Dec 2020 12:30 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தெருவில் திரியும் மாடுகளை அறுத்து பலி கொடுக்கப் போவதாக SDPI கட்சியினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையினரான இந்துக்கள் தெய்வமாக வழிபடும் மாடுகளை பலி கொடுப்போம் என்று முஸ்லிம் அமைப்பினர் மிரட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SDPI கட்சியின் மேலப்பாளையம் சட்டமன்ற முகநூல் பக்கத்தைத் தற்செயலாக பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த போஸ்டரை பார்த்த இந்து முன்னணி வழக்கறிஞர் குற்றாலநாதன் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் நெல்லையில் பல பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலப்பாளையத்தில் சுற்றித்திரியும் பஜார் மாடுகளை பலி கொடுக்கும் போராட்டம் #SDPI

Posted by Hussain Ali on Thursday, 24 December 2020

சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது போக்குவரத்துக்கு தொந்தரவு தான் என்றாலும் மாவட்ட நிர்வாகம் கைப்பற்றப்படும் கால்நடைகளை கோசாலைகளில் ஒப்படைப்பது தான் வழக்கம். அவ்வாறு இருக்கும் போது இந்துக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமாக மாடுகளைப் பலியிடுவோம் என்று அச்சுறுத்துவது ஏன் என்று வழக்கறிஞர் குற்றாலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுவதற்கு பதிலாக இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியது இந்துக்களை வன்முறைக்கு தூண்டுவதாகவும் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவும் தெரிகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு என்று கூறி பேராட்டத்தில் பங்குபெற்றவர்கள் இப்போது அங்கு போனார்கள் என்ற கேள்வியை பலர் முன்வைத்துள்ளனர்.

தன் கன்றுக்கு நீதி கேட்டு வந்த பசுவுக்காக தன் மகனையே பலி கொடுத்த மனுநீதிச் சோழன் வாழ்ந்த மண்ணிலா இந்தக் கொடுமை என்ற வேதனை எழாமல் இல்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ 'தமிழ் திராவிடம்' என்று பெயர் வைத்துக் கொண்டு "குர்பானி குடுத்தா தான் திருந்துவானுங்க" என்று சற்றும் இரக்கமில்லாமல் பதிவிட்டுள்ளனர்.

SDPI முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போஸ்டர் தற்போது நீக்கப்பட்டு விட்டது. ஆனால் மேலப்பாளையம் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த போஸ்டரை தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News