இலவசங்கள், நலத்திட்டங்கள் இரண்டும் வெவ்வேறு: தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ.க பதில்!
இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்கள் இரண்டும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ.க பதில்.
By : Bharathi Latha
தேர்தலில் ஓட்டு வாங்க சில அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சில வாரங்களுக்கு முன்பு குற்றம் சாட்டி இருக்கிறார். அதற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இலவசங்கள் என்று சொல்லி மக்களுக்கான திட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் இது முக்கியமான பிரச்சனை. இது பற்றி விவாதிப்பது அவசியம் என்று கருத்து தெரிவித்தது. தேர்தல் கமிஷனும் இப்ப பிரச்சனையை கையில் எடுத்து இலவசங்கள் தொடர்பான தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை திருத்தம் செய்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியது.
தேர்தல் கமிஷனுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பதில்:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நிதி ஆதாரங்கள் குறித்து வாக்களிப்பவர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தேர்தல் கமிஷனுக்கு பாரதிய ஜனதா கட்சி தனது பதிலை அனுப்பி வைத்துள்ளது. அதில் பா.ஜ.க சார்பில் இலவசங்கள் வேறு, நலத்திட்டங்கள் வேறு. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. வீடு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது ஒரு ரகம், மின்சாரத்தை இலவசமாக அளிப்பது மற்றொரு ராகம். வீடு அத்தியாவசியமானது. ஒரு தடவை மட்டுமே கொடுக்கக்கூடியது. கொரோனா காலத்தில் பலர் வேலை இழந்ததால் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்:
இவை எல்லாம் நலத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளிட்ட வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும் கொள்கை முடிவு. மின்சாரத்தை இலவசமாக வழங்குவதை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அதே சமயத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நிதி ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தலில் கமிஷன் யோசனையில் எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறி இருக்கிறது. வாக்காளர்கள் பிறரை சார்ந்திருக்கும் நிலையில் உருவாக்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு அதிகாரம் அளித்து நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களது திறனை மேம்படுத்துவதில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க கேட்டுக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: India Today