2024ஆம் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற இலக்கு: பா.ஜ.கவின் மாஸ்டர் பிளான்!
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற பாரதீய ஜனதா இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
By : Bharathi Latha
மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் ஒரு முயற்சியில் பா.ஜ.க தற்பொழுது களமிறங்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு பொது தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் வென்று இருக்கிறது. தற்பொழுது 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் 2024 அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஒரு நோக்கில் பா.ஜ.க தற்பொழுது தேர்தல் வியூகங்களை கச்சிதமாக வகுத்து வருகிறது.
அந்த வகையில் கட்சியின் தேர்தல் பணியில் தொடங்கி மும்மரமாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற பா.ஜ.க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இது குறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில் பா ஜ.க செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்கள் வெல்வதற்கு தற்பொழுது பணிகளை தொடங்கி விட்டது. 400 இடங்கள் என்பது பிடிக்க முடியாது என்பது அல்ல, கட்டாயம் இதை நாங்கள் அடைந்தே தீருவோம் 2014 ஆம் ஆண்டு மிஷன் 273 என்று பணியாற்றி அதன் இலக்கை அடைந்தோம்.
அந்த வகையில் அதே மாதிரி தற்பொழுது 400 என்று இலக்கை நோக்கி பயணிக்கிறோம் இம்முறையும் இலக்கை ஏற்றுவோம் அந்த முயற்சியில் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 160 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு சாவடிகளில் கட்சியை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் புகழ், அவர் மக்கள் சார்ந்த ஆட்சி களம், தொண்டர்கள் செய்யும் உழைப்பு ஆகியவற்றை வெற்றி பெற்று தரும் என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Maalaimalar