டிவிட்டர் டிரெண்டிங்கில் "நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு" - 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை அள்ளிக் குவித்து அபாரம்!
By : Kathir Webdesk
திமுக கூட்டணி கட்சிகள் முதலில் தமிழகத்தில் தாமரை மலராது என்றனர். பிறகு தமிழகத்தில் ஊடுருவி விடுவார்கள் என்றனர். கடைசியில் தமிழகத்தை ஆள முடியாது என்கின்றனர். இந்த மாற்றதை வைத்து பார்க்கும் போது, தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்றி வருவது உறுதியாகிவிட்டது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், டிவிட்டர் டிரெண்ட்ங்கில் "நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு" என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.
நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இப்படியிருக்கையில், தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு நினைத்ததைப் போன்று பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
இதன்மூலம், திமுக, அதிமுகவை தொடர்ந்து அதிக இடங்களில் வென்ற 3வது கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. இதுவரையில் 119 பேரூராட்சி உறுப்பினர்களும், 29 நகராட்சி உறுப்பினர்களும், 3 மாநகராட்சி உறுப்பினர்களும் பாஜக தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் பாஜக வளராது என்று எதிர்கட்சியினர் கூறி வந்த நிலையில், தற்போது பல இடங்களில் பாஜக வெற்றி இருப்பது அக்கட்சியினரிடையே மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.