ஆப்கன்: ஹெலிகாப்டரில் வித்தியாசமான முறையில் ரோந்து செல்லும் தலிபான்கள் !
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் தலிபான்களின் ரோந்து செல்லும் காட்சிகள்.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் குறிப்பாக தங்கள் கீழ் ஆட்சி வந்தவுடன் அவர்கள் பிற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரின் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆப்கன் நபரின் உடலை தொங்கவிட்டு தலிபான்கள் ரோந்து நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் நாளுக்கு நாள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் உள்ளன. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா நாடு விட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி ஆப்கன் நபரின் உடலை தொங்கவிட்டு ரோந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது பல்வேறு தரப்பினரையும் தற்பொழுது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றை, " இது தங்களது விமானப்படை" என தலைப்பை வைத்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். காபூலில் தாங்கள் விட்டு வைத்த ராணுவ விமானங்கள் மற்றும் தளவாடங்களை தலிபான்களால் காட்சி பொருளாக மட்டுமே வைக்க முடியும், அவர்களால் இயக்க முடியாது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருந்தால் இந்நிலையில் அவர்கள் அமெரிக்க விமானப்படையின் ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: economic time's