Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான்: அலையலையாக விமான நிலையத்தை நோக்கி வரும் மக்களின் பரிதாப நிலை !

சமூக வலைதளங்களில் தற்போது ஆப்கானிஸ்தான் மக்கள் விமான நிலையத்தை நோக்கி வரும் வீடியோ மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான்: அலையலையாக விமான நிலையத்தை நோக்கி வரும் மக்களின் பரிதாப நிலை !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Aug 2021 12:55 PM GMT

ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் பலமாக நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்கள். ஏனென்றால் தலிபான்கள் தீவிரவாதிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதனால் ஆப்கானிஸ்தானில் இருப்பது தங்களுடைய உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடைக்காது என்ற பயத்தில் எல்லா மக்களும் தற்பொழுது விமான நிலையத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து உள்ளார்கள்.




இதன்காரணமாக குறிப்பாக நேற்று விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு மக்கள் கூடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பயணிகளுக்கு விமான இருக்கைகள் முடிந்துவிட்டன. இருந்தாலும் மக்கள் எப்படியாவது? இங்கு இருந்து வெளியேற வேண்டும் என்று முடிவினால், விமானத்தில் உள்ளே நுழைந்தது, கூட்ட நெரிசலில் சிக்கி இதனால் அங்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


இதற்கிடையே, தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்று விட்டதால் அங்கு வாழ அஞ்சிய பொதுமக்கள் பலரும் காபூல் நகர விமான நிலையத்துக்குள் குவிந்து வருகின்றனர். அந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு தற்போது நேட்டோ கூட்டுப்படைவசம் உள்ளது. இருந்தபோதும், ஆங்காங்கே நேற்று மாலை முதல் துப்பாக்கி சூடு சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால், அங்கு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் சேவை அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

Input:https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/global-58226938.amp

Image courtesy:BBC News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News