6,000 ஆண்டுகள் முன்பு இருந்த கற்கால மனிதர்களின் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு !
அகழ்வாராய்ச்சி பணியில் போது கண்டுபிடிக்கப்பட்ட 6,000 ஆண்டுகள் பழமையான கல்லறை பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
By : Bharathi Latha
தற்போது ருமேனியாவின் டிரான்சில்வேனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சுமார் 6,000 ஆண்டுகள் பழமையான கல்லறை புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியில் கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களின் ஏராளமான எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதை தவிர பல்வேறு மண்பாண்ட பாத்திரங்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டன. எனவே அந்தப் பகுதிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கால மனிதர்களின் கல்லறை சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்ற ஒன்றாக உள்ளது.
குறிப்பாக 2200 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய குழியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். ற்கால மனிதர்களால் உணவை சேமிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய குழி தான். எனினும் தற்போது ஒரு கால்நடை மண்டை ஓடு மற்றும் பீங்கான் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை வெளியே எடுக்கப்பட்டு உள்ளன. டிரான்சில்வேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் தொல்பொருள் ஆய்வாளராக ஒருவர் இது பற்றி கூறுகையில், "இந்த அகழ்வாராய்ச்சிகள் மிக முக்கியமானவை. கற்கால நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், நிச்சயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஏனென்றால் அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதன் மூலம், நம்மைப் பற்றி மேலும் நாம் தெரிந்து கொள்ளலாம். கடந்த காலத்தை பார்க்கவும், தனித்துவமான மற்றும் சிறப்பான ஒன்றை பார்க்கவும் நாம் பாக்கியம் செய்துள்ளோம்" என்று அவர் கூறினார். தற்போது கண்டறியப்பட்ட பொருட்கள் மூலம் இந்த கடந்த காலத்தை எடுத்து விசேஷமான ஒன்றை மக்களுக்கு வெளிப்படுத்த முடிகிறது. பொருள்கள் மற்றும் எலும்புகள் மீண்டும் ஆய்வுக்காக அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளன. விரிவான ஆய்வு முடிந்தவுடன் அவை பாதுகாப்பாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
Image courtesy:news18