வாழ்நாளில் இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது தான் நிகழும் !
மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் டால்பின்களின் குறும்புத்தன வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
By : Bharathi Latha
டால்பின்கள் மிகவும் இயல்பாக பழகும் கடல் உயிரினம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அடிக்கடி மனிதர்கள் கடலில் நடமாடும் பகுதிகளுக்கு வந்து மனிதர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் உயிரினமாகவும் அது இருக்கிறது. அதனுடைய மொழிகளிலும் கூட மனிதர்களிடம் அது ஏதேனும் ஒரு விஷயத்திற்காக வருவதாகவும் கடல்வாழ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்வானேஜ் விரிகுடாவில் ஒரு சிலர் பெடலிங் செய்து கொண்டிருக்கும் போது தொடர்ந்து வந்து பெடலிங் பயிற்சியில் ஈடுபட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது டால்பின்கள்.
இத்தகு டால்பின்களின் உற்சாகமான குறும்புத்தனம் வீடியோ ஃபிலிப் பால்மர் என்பவரால் எடுக்கப்பட்டு, அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பற்றி அவர் கூறுகையில், "மனிதர்களுக்கு மிக அருகே விளையாட டால்பின்கள் ஆரம்பித்த போது நாங்கள் எங்களின் பணிகளை நிறுத்திவிட்டு அதனை பார்க்க துவங்கிவிட்டோம். வாழ்நாளில் இது போன்ற அதிசயங்கள் எப்போதாவது தான் நிகழும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக சுமார் 42 நொடிகள் ஓடிய இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய துவங்கியுள்ளனர். மனிதர்கள் இடம் மிகவும் நெருக்கமாக பழக கூடிய கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Input:https://indianexpress.com/viral/trending-viral-video-of-dolphins-impress-paddleboarders-336368/lite/
Image courtesy:indianexpress