100 ரூபாய்க்கு வாங்கிய விமானம்: இன்று கோடிக்கணக்கில் வருமானத்தை தருகிறதாம்!
வெறும் சுமார் இந்திய மதிப்பில் 100-க்கு வாங்கிய விமானம் தற்போது கோடிக்கணக்கில் வருமானம் தருகிறது.
By : Bharathi Latha
நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத எந்த ஒரு பொருளும் அதனுடைய மதிப்பு குறைந்து பிறகு ஏதேனும் ஒரு விலையில் விற்கப்படுகிறது. இதனை இரண்டாம்தர பொருட்கள் என்று கூறுவார்கள்.அதனை பயன்படுத்த முடியாது என்ற பட்சத்தில் அதன் உரிமையாளர்கள் அதனை மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள். நம் நாட்டில் பெரும்பாலும் இரண்டு சக்கரம், நான்கு சக்கரம், லாரி போன்ற பல்வேறு கனரக வாகனங்களும் பல வருடங்கள் கழிந்து பிறகு விற்கப்படுகின்றது. பிறகு அந்த வாகனத்தை வாங்கி தெருவோரங்களில் கடைகளை நடத்தி வருபவர்கள் தங்களுக்கு ஏதுவான வாகனங்களாக மாற்றி பயன்படுத்துவார்கள். அந்தவகையில் பிரபல நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானம் தற்பொழுது ஒரு டாலர் மதிப்பிற்கு விற்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய மதிப்பில் சுமார் 102 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த விமானத்தை ஒருவர் வாங்கியுள்ளார். மேலும் இந்த விமானத்தை தற்பொழுது ஆடம்பர பார் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபமாகவும் மாற்றியுள்ளார். இதனை மாற்றுவதற்கு இவர் 5 கோடி வரையிலான செலவுகளையும் செய்துள்ளாராம். மேலும் உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு ஆடம்பர பொருட்களையும் இந்த விமான மண்டபத்தில் வைத்துள்ளாராம். எனவே இது தொடர்பான ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விமானமே மற்றொரு வடிவில் உருவெடுக்கும் செய்தி பலரையும் கவர்ந்துள்ளது.
தற்போது இந்த விமானம், இங்கிலாந்தின் கோட்ஸ் வால்ட் விமான நிலையத்தில் இந்த சொகுசு பார் விமானம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த விமானத்தில் நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் செலவு செய்ய வேண்டுமாம். கிட்டத்தட்ட இதன் மூலம் வருமானம் கோடிக்கணக்கில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் உரிமையாளர் கோட்ஸ் வால்ட் விமான நிலைய முன்னாள் முதன்மை செயல் அதிகாரி சுன்னாஹ் ஹார்வே இந்த விமானத்தை வாங்கி இதுபோல சொகுசாக மாற்றி வைத்திருக்கிறார்.
Input & Image courtesy: News 18