மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட மூக்கு வழி கொரோனா மருந்து!
மத்திய அரசின் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து சேர்க்கப்பட்டிருக்கிறது.
By : Bharathi Latha
உலக அளவில் தற்பொழுது கொரோனா மீண்டும் உருமாற்றம் அடைந்து உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில் மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா ஓமிக்கரான் வைரஸ் என்ற வகையில் தீவிர உருமாற்றம் அடைந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு இந்தியா தன்னுடைய தடுப்பூசி திட்டத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இந்தியா அரசாங்கமும் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்தை சேர்த்து இருக்கிறது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், மத்திய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்கு வழியாக செலுத்தும் கொரோன மருந்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அதன்படி இன்று முதல் கொரோனா 19 தடுப்புசி திட்டத்தின் கீழ் தற்பொழுது மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்தும் சேர்க்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக கொரோனா மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி வழங்கப்படும். இவற்றின் விலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar