வித்தியாச முயற்சியாக சாக்லெட் புலியைப் வடிவமைத்த சமையல் கலைஞர்!
சாக்லேட்டில் புலியை வடிவமைத்த சமையல் கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
By : Bharathi Latha
பல்வேறு சமையல் கலைஞர்கள் தங்களிடம் இருக்கும் வித்தியாசமான முயற்சிகளை வெளிக்கொண்டுவரும் விதமாக தன்னுடைய அனைத்து சமையல் கலைகளையும் புகுத்தி பல்வேறு விதங்களில் உணவுகளை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, ஒரு சமையல் கலைஞர் வித்தியாசமான முயற்சியாக புலியை வடிவமைத்துள்ளார். பார்ப்பதற்கு பாயும் புலி போலவே காட்சியளிக்கும் இது உண்மையில் சாக்லெட் புலி. மேலும் இதை செய்யும் பொழுது அவர் விடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது நடந்து முடிந்த லூனார் என்று சொல்லப்படும் சீன புத்தாண்டுக்கான ஸ்பெஷலாக சாக்லேட் புலியை டிசைன் செய்துள்ளார் அவர். ஸ்விஸ், பிரெஞ்ச் முறையிலான பேஸ்ட்ரி சமையலில் வல்லுநராக திகழும் இவர், இதுபோன்று புதுமையான விஷயங்களை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு பேஸ்ட்ரி மற்றும் சாக்கலேட் கலவைகளில் ஏராளமான டிசைன்களை அமௌரி செய்துள்ளார். ஆனால் தற்பொழுது இவர் வடிவமைத்துள்ள இந்த சாக்லேட் டிசைன்தான் பார்ப்பதற்கு உண்மையாகவே தோன்றுகிறது, பலரையும் கவர்ந்துள்ளது.
மேலும் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் புலியின் முகம், காது, வால், பாதம் என அத்தனை பாகங்களையும் இவர் டிசைன் செய்திருக்கிற விதம், நிஜத்தில் புலியை பார்ப்பது போலவே இருக்கிறது. புலி சிலையை சாக்லேட்டில் செய்த பிறகு, edible பெயிண்ட் பயன்படுத்தி அதற்கு வண்ணம் அடித்துள்ளார். குறிப்பாக, புலியின் முதுகில் வரையப்பட்டுள்ள கோடுகள், அதன் பின்பகுதியில் இருந்து வளைந்து நிற்கும் வால் போன்றவை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளன. விழும் இந்த வீடியோவிற்கு பலருடைய கருத்துக்களையும் தெரிவித்து உள்ளார்கள்.
Input & Image courtesy: News 18