Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை விமான நிலைய சுங்கத் துறையின் சோதனை: 6.5 கிலோ தங்கம் பறிமுதல்!

ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் மின்னணு சாதனப் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறையின் சோதனை: 6.5 கிலோ தங்கம் பறிமுதல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Aug 2022 5:20 AM GMT

உளவுத்துறை அளித்த தகவலின்படி, துபாயிலிருந்து 03.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் எண் EK546 மற்றும் 04.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் எண் EK542 ஆகிய விமானங்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சையத் மீர்சாவின் மகன் முகமது இப்ராஹிம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹனிஃபாவின் மகன் சாதிக் அலி ஆகியோர் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


இந்த சோதனையின்போது, 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் மற்றும் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இப்படிப்பட்ட சோதனைகள் வழக்கமாக நடைபெறும் மட்டும் ஒன்றுதான் ஆனால் இந்த வழக்கில் சற்று அதிகமாக கிடைத்துள்ளது அனைவருக்கும் இடையில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மற்றொரு சோதனையில், அண்ணா பன்னாட்டு விமான நிலைய வரவேற்புப் பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குப் பின்னால் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 தங்க பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி, 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான 3.52 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News