பேக்கேஜில் ஏற்பட்ட லீக்கேஜ் - சென்னையில் மழை நீரில் மூழ்கிய மாநகர பேருந்து - பயணிகள் அலறல்!
By : Kathir Webdesk
சென்னையில் கனமழை
சென்னையில் பெய்த தொடர் கன மழையால், பல்வேறு முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெள்ள நீர் தேங்குவதை தடுக்க 96 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக சென்னை மேயர் கூறினாலும், அந்த பகுதிகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
சென்னை மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த 64சி மாநகர பேருந்து, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கியது. இதனால் பேருந்திற்குள் இருந்த 26 பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தீயணைப்பு துறையை சேர்ந்த 20 மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிற்றின் உதவியுடன் 26 பயணிகளையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.