Kathir News
Begin typing your search above and press return to search.

காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி - யார் காரணம்?

குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டால் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம்.

காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி - யார் காரணம்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2022 4:45 AM GMT

திருப்பூரை அடுத்து திருமுருகன் பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற பெயரில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு காப்பகம் செயல்படுத்தி வருகிறார். இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். பெற்றோரை இழந்தவர்கள் தந்தை அல்லது தாயை இழந்த சிறுவர்கள் இங்கு தங்கி அருகில் உள்ள மாப்பாலயம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் காப்பகத்தில் 15 குழந்தைகள் இருந்தனர். நேற்று அதிகாலை காப்பகத்தில் தங்கி இருந்த சிறுவர்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். திருப்பூரைச் சேர்ந்த பாபு அத்திய பாளையத்தை சேர்ந்த ஆதேஷ், அங்கு இரு சிறுவர்கள் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார்கள். இதை அடுத்து மற்ற சிறுவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். உடனடி தகவலை அறிந்த திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.


குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ள சிறுவர்கள் கூறும் பொழுது, கடந்த நான்காம் தேதி இரவு சுண்டல், புளியோதரை, லட்டு சாப்பிட்டோம். நேற்று முன்திடம் காலையில் இட்டிலி, பொங்கல் வழங்கப்பட்டது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் மதியம் ரசம் சாதம் வழங்கப்பட்டது. இதை எங்களால் சாப்பிட முடியவில்லை. இரண்டு பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.


அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இரவிலும் ரசம் சாதம் வைத்திருந்தார்கள். பின்னர் அதிகாலை உங்களுக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. அதன் பிறகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவித்தார்கள். எனவே உணவு கெட்டுப் போனதால் இந்த வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட காப்பகத்தின் உணவுப்பொருள் மாதிரிகளையும் பகுப்பாய்வுக்கு அதிகாரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். வெளி நபர்கள் மூலமாக காப்பகத்துக்கு இனிப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த இனிப்பு வகைகளில் ஏதேனும் கெட்டுப் போய் இருந்தன என்று கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News