Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் அறிவுரை கூறும் நிறுவனங்கள் - வறுக்கும்  நெட்டிசன்கள்.!

இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் அறிவுரை கூறும் நிறுவனங்கள் - வறுக்கும்  நெட்டிசன்கள்.!

இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் அறிவுரை கூறும் நிறுவனங்கள் - வறுக்கும்  நெட்டிசன்கள்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Nov 2020 4:36 PM GMT

கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுவாக இந்து மக்களின் பண்டிகைகளை தாக்கிய பல்வேறு விளம்பரங்கள் வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை கொடுத்துள்ளனர். ஆனால் இவர்கள் ஏன்? கிறிஸ்துமஸ் அன்று மரம் வெட்ட கூடாது. ரம்ஜான் அன்று ஆடுகளை பலி கொடுக்க கூடாது என்று ஏன் சொல்லவில்லை.

மேலும் பொங்கல் பண்டிகை இந்து பண்டிகைகளே கிடையாது என்பதும், ஹோலி அன்று தண்ணீரை சேமிக்க வேண்டும் மற்றும் லட் என்ற குச்சியை பயன்படுத்தக் கூடாது என்பது போன்று இந்து பண்டிகைகளை குறிவைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். இந்து மக்கள் தங்களுடைய விருப்பமான பண்டிகைகளை கூட மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு விடாமல், தங்களை ஒரு மாயவலையில் சிக்க வைக்க இத்தகைய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.


வோல்வோ ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனம் தற்போது இந்து மக்களுக்கு தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது போன்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த விளம்பரத்தில் 'மாசு இல்லாத தீபாவளி'யை இந்து மக்கள் கொண்டாட வேண்டும் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்து மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க கூடாத என்பது போன்று கூறப்பட்டுள்ளது

இந்த விளம்பரம் தற்போது சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் கோபத்திற்கும் ஆளாகி உள்ளது வோல்வோ ஆட்டோ மொபைல்ஸ். ஏற்கனவே தனிஷ்க் இந்து மக்களுக்கு அறிவுரை கூறுவது போன்ற ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது மீண்டும் வோல்வோ ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைவரும் இன்று மக்களுக்கு அறிவுரை கூறும் விளம்பரங்களாக வெளியிட்டு வருகின்றனர் இதனால் இந்த மாதிரி செயல்கள் நெட்டிசன்கள் இடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.

ஆனால் வோல்வோ ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்கள் அதிக அளவில் மாசு ஏற்படுத்திய காரணத்திற்காக ஜெர்மன் மோட்டார் அமைப்பான ADAC இடம் ரூ. 36 இலட்சம் முதல் 1.36 கோடிகள் வரை அபராதம் கட்டியுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் தாங்கள் உற்பத்தி செய்யும் கார்கள் மாசுக்களை ஏற்படும் பொழுது, இந்து மக்களுக்கு இவர்கள் 'மாசு இல்லாத தீபாவளியை' கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறுவது எந்த வகையில் நியாயம் என்று பல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும் ஆண்டு முழுவதும் இவர்களுடைய கார்கள் சாலையில் மாசை ஏற்படுத்தலாம். ஆனால் தீபாவளி ஒரு நாளன்று இந்துக்கள் பட்டாசு வெடிப்பது இவர்களுக்கு மாசை ஏற்படுத்தும்மாம்! என ஒரு அநியாயமான செயல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News