Kathir News
Begin typing your search above and press return to search.

FCRA விதிக்கு எதிராக குழந்தைகளை மதமாற்ற முயற்சி: கிறிஸ்தவ மிஷனரி NGO பின்னணியிலா?

FCRA விதிகளுக்கு எதிராக சிறுபான்மை இனத்தை சேர்ந்த குழந்தைகளை மதமாற்ற முயற்சியில் ஈடுபடுத்தும் NGO.

FCRA விதிக்கு எதிராக குழந்தைகளை மதமாற்ற முயற்சி: கிறிஸ்தவ மிஷனரி NGO பின்னணியிலா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Dec 2022 9:14 AM GMT

சிறார் நீதி சட்டம், எஸ்.சி/எஸ்.டி சட்டம் மற்றும் FCRA சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக சிறு குழந்தைகளை குறிவைத்து, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த குழந்தைகளை கிறிஸ்தவ மிஷனரிகளின் NGO மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக புகார்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சமூக சேவை என்பதன் பெயரில் என்.ஜி.ஓ குழந்தை இல்லங்களை நடத்தும் மிஷனரிகள் மதமாற்றத்திற்காக பழங்குடி மக்களை குறிவைத்து இன்னும் முயற்சி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் வேதன்யா விஷன் டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நரிக்குறவர் மற்றும் செஞ்சு ஜாதி குழந்தைகள் முறையே, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தை குறிவைத்து குழந்தைகளை வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி மதம்மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தி வருகிறது.


மேலும் அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியாது, வீட்டிலிருந்து அவர்களை கவனித்துக் கொள்ள ஒரு வயதான நபர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கேட்பார் யாரும் இன்றி இருக்கும் குழந்தைகளை குறி வைத்து, அவர்களை மதமாற்றம் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அத்தகைய NGO மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு குழந்தை இல்லங்கள் மேலும் ஆந்திராவில் இரண்டு குழந்தை இல்லங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


பெதன்யா விஷன் டிரஸ்ட் அதன் இணைதளத்தில் ஒரு கிறிஸ்தவ அமைச்சகம் என்று அறிவிக்கிறது. மேலும் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் நடத்தப்படும் என்.ஜி.ஓக்கள் மூலமாக படிக்கும் குழந்தைகளை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஈடுபடுத்தி வருகிறார்கள். அரசு இந்த சமூகத்தை புறக்கணித்து மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை அணுகவும், அவர்களின் குழந்தைகளுக்கு சரியான கல்வி வழங்குவோ இல்லை. ஏனெனில் அதற்கு ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மிஷனரிகள் அத்தகைய சான்றிதழ் இல்லாத குழந்தைகளை குறிவைத்து தங்களுடைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Organiser News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News