இமாச்சல பிரதேச தந்திரமாக தேர்தலுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ் கட்சி!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதா?
By : Bharathi Latha
ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிற மாநிலத்தில் தற்பொழுது 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வருகின்ற 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பெரும் போராட்டம் மற்றும் அனல் பறக்கும் பிரச்சாரங்களும் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு இறந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி தற்பொழுது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை தன் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறது..
குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலுக்கு கட்சிகரமான அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஏற்கனவே ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
வீடுகளுக்கு முன்னுரிமை 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 18 60 வயது பிரிவு பெண்களுக்கு மாதம் 500 உதவித்தொகை வழங்கப்படும். ஸ்டார்ட் அப் என்னும் புது நிறுவனங்களுக்கு தொடங்க தொகுதிக்கு 10 கோடி ஒதுக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும், மாநிலத்தின் கடன் சுமைகள் குறைக்கப்படும். வாடகைக்காரர் டிரைவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். ஆட்டோ பர்மிட் காலம் 10 ஆண்டு என்பது பதினைந்து ஆண்டு உயர்த்தப்படும்.இவ்வாறு கவர்ச்சிகரமான அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
Input & Image courtesy: Polimer News