Kathir News
Begin typing your search above and press return to search.

ஆதிதிராவிடர் மீதான வன்முறை தமிழகம் 2ம் இடம் - திராவிட அரசியலின் விளைவு

மதம் மாறிய ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களின் ஜாதி சான்றிதழ் இனிமேல் செல்லாது தேசிய ஆதி திராவிடர் ஆணையம் அறிவிப்பு.

ஆதிதிராவிடர் மீதான வன்முறை தமிழகம் 2ம்  இடம் - திராவிட அரசியலின் விளைவு
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Sep 2022 2:58 AM GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் இது பற்றி கூறுகையில் மதம் மாறுகிற ஆதி திராவிடர்கள் வகுப்பை சேர்ந்தவர்களின் ஜாதி சான்றிதழ் இனி செல்லாது என்று அவர் கூறியிருக்கிறார். மீறி அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலியாகவே கருதப்படும். போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தற்போது அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதமாறும் போது தானாகவே அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள்.


மதம் மாறிய பிறகும் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஜாதி சான்றிதழ் இருந்தால் அது இனிமேல் செல்லாது. மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழாகவே கருதப்படும். இது குறித்து பல்வேறு வகையான புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான குழு அமைப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன ஆதி திராவிடர் ஆணையத்திற்கு கடந்தை ஒன்றை வருடங்களில் தமிழகத்தில் இருந்து 200 பிகர்கள் வந்துள்ளது. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடத்தி வருகிறது இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறையில் ராஜஸ்தான் மாநில முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது மேலும் இது தொடர்பாக கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்வதில் அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: Maalai malar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News