Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: மூத்த காங்கிரஸ் தலைவர் மீது FIR பதிவு.!

தனது புத்தகத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்ததற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் மீது FIR பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: மூத்த காங்கிரஸ் தலைவர் மீது FIR  பதிவு.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Dec 2021 1:45 PM GMT

அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களாக இருந்தாலும் சரி நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை புத்தகம் எழுதும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு வெளிக்காட்டாமல் பொதுநல நோக்கில் தான் எழுத வேண்டும். குறிப்பிட்ட மதத்தை கடுமையாக தாக்கி அல்லது ஏதேனும் தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு கூறினாலும் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் சல்மான் குர்ஷித் சமீபத்தில் இவர் எழுதிய புத்தகத்தில் இந்து மதம் குறித்த சர்ச்சையான கருத்துக்களுக்காக நீதிமன்றம், இவர் மீது FIR பதிவு பதிவு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.


கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றம் இவர் மீது இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூத்த காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித் சமீபத்தில் எழுதிய "சன்ரைஸ் ஓவர் அயோத்தியா: நேஷன்ஹூட் இன் எவர் டைம்ஸ்" (Sunrise Over Ayodhya: Nationhood in our times), என்ற புத்தகத்தில் இந்துக்கள் பற்றி சர்ச்சையான கருத்தை இவர் எழுதியுள்ளார்.


குறிப்பாக இவர் எழுதிய இந்த புத்தகத்தில் இந்துக்களை சனாதன் அமைப்போடும் மற்றும் ISIS தீவிரவாத அமைப்புகள் ஓடும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக மேஜிஸ்ட்ரேட் சந்தாணு தியாகி என்பவர் மூத்த காங்கிரஸ் தலைவர் மீது FIR பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் மூன்று நாட்களில் FIR சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Input & Image courtesy: Times of India






Next Story
கதிர் தொகுப்பு
Trending News