சூடான் நாட்டு போர்... 3 வாரங்களாக தொடரும் நிலைமை... ஏன் உலகிற்கு இந்த நிலைமை?
சூடான் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக 528 பேர் உயிரிழப்பு.
By : Bharathi Latha
நம்முடைய அண்டை கண்டமான ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஒரு நாடு தான் சூடான். இங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது, இருந்தாலும் ராணுவத்தில் சில உட்பிரிவு உள்ளது. ராணுவத்தில் இருக்கும் ஒரு பிரிவினருக்கும், அதன் துணை பிரிவினருக்கும் இடையில் தான் தற்பொழுது போர் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வப்போது இந்த இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல் அதிகரித்துக் கொண்டிருந்தது. அது தற்பொழுது போராக மாறி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 15ஆம் தேதி ஏப்ரல் மாதம் இரண்டு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் போராக வெடித்தது. இது எடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவாக்கியது. சூடானில் தற்பொழுது பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் இருந்து வருகிறார்கள்.
இந்தியாவில் இருந்து பல்வேறு தரப்பினர் சூடானில் இருப்பதும் போர் அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் ஆபரேஷன் காவேரி என்ற மிஷின் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். இந்த உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் பல்வேறு இடங்களில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொதுமக்கள் வெளிநாட்டினர் உட்பட பலரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
மூன்று வாரங்களை தாண்டி நடைபெறும் இந்த ஒரு உள்நாட்டின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்திருக்கிறது. அதைப்போல் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போர் கூட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. உலக எங்கும் இருக்கும் நாடுகளின் சில குறுகிய சுயநல காரணங்கள் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இடையே போர்கள் நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Hindu News