டெல்லி: 19 ஆண்டுகளாக இல்லாத வகையில் கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தொடர்ச்சியான வண்ணம் கனமழை பெய்து வருவது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகின்றது.
By : Bharathi Latha
டெல்லியில் தற்பொழுது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 4ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியதுடன், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அங்கு உள்ள பகுதிகள் முழுவதும் மழை நீரால் நிரம்பி வழிகின்றன. டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதல் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக தடை பட்டதாக அவர்கள் வருத்தம் அடைந்து உள்ளார்கள். இருந்தாலும் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது அதிகமான அளவில் கனமழை பெய்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே இந்த கனமழையின் காரணமாக மக்கள் எவ்வளவு வாகனப் போக்குவரத்தில் அவதிப் படுகிறார்கள் என்பது போன்ற வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து உள்ளார்கள். அது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2002 ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி 126.8 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே 19 ஆண்டுகள் கடந்து தற்போது தான் அதிகமாக கன மழை பெய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy:India Today