இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்த ஒப்பந்தம்: மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
By : Bharathi Latha
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி என்பது தற்போது பெரும் அளவில் ஏற்பட்டு இருக்கிறது. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் புரட்சியின் மாற்றம் பெருமளவில் அதிகரித்து இருக்கிறது என்று கூட கூறலாம். பல்வேறு மக்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு தற்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எனவே டிஜிட்டல் பயன்படுத்த எப்பொழுது கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்தான முடிவுகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த மின்னணு நிர்வாகச் சேவை இந்தியா நிறுவன பொதுச்சேவை மையத்தின் துணை நிறுவனமான சி.எஸ்.சி அகாடமி மற்றும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த, முன்னெடுப்புகளை கூட்டாக அமல்படுத்த இரு அமைப்புகளுக்கிடையே நீண்டகால கூட்டாண்மையை ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறன்மேம்பாடு, அங்கிகாரமையம், டிஜிட்டல் அகாடமி, பயிற்சியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம், டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம் தொழில் முனைவோர் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் சான்றிதழ்கள், பரஸ்பர கூட்டாளிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான வழிமுறைகள் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கவும், வடிவமைக்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News