Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு: ஆராய்ச்சிகள் அசத்தல்!

மத்திய பிரதேச மாநிலத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு: ஆராய்ச்சிகள் அசத்தல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Jan 2023 12:43 AM GMT

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் டைனோசர் கூடுகள் மற்றும் பல்வேறு முட்டைகளை கண்டுபிடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வலைதளங்களில் இது பற்றியான தகவல்கள் அதிகமாக பரவி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகம், கொல்கத்தா மற்றும் கோபால் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதை பள்ளத்தாக்கில் அதாவது தற்போது உள்ள தார் மாவட்டத்தில் உள்ள பாக்கு மற்றும் குஷி பகுதிகளில் சுமார் 756 புதை வடிவமுட்டைகளையும் மற்றும் அதன் கூடுகளையும் கண்டுபிடித்து உள்ளனர்.


இதை மிக அளவில் பெரியவை. இது குறித்த ஆய்வு தகவல் பிளஸ் 1 என்று ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியாகி இருந்தது. டைனோசர் கூடுகள் மற்றும் அதுபற்றி முட்டைகள் பற்றிய ஆய்வு ஆறு கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதிகளில் நீண்டு கழுத்து கொண்ட டைனோசர்கள் வாழ்க்கை பற்றிய முக்கிய தகவல்களை தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறது. இது பற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் வர்மா அவர்கள் கூறுகையில், பிரிட்டிஷ் கடல் நர்மதையுடன் இணைந்து இடத்தில் உருவான கடைமுகத்தில் இருந்து டைனோசர் முட்டைகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


நர்மதை பள்ள தாக்கில் காணப்படும் முட்டைகளில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருந்தன. பொதுவாக கூடுகள் ஒன்றுக்கொன்று சிறிது தூரத்தில் அமைந்திருக்கும். நர்மதை பள்ள தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் 15 சென்டிமீட்டர் முதல் 17 செண்டி மீட்டர் வரை அளவிலான விட்டம் கொண்டது என்று அவர் கூறினார். மேலும் இது பற்றி ஆய்வுகள் ஆச்சரியமூட்டும் பல்வேறு தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News