Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யா- உக்ரைன் இடையே பதற்றம்: சீன ஊடகங்களில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள்!

ரஷ்யா-உக்ரைன் போர், சீன சமூக ஊடகங்களில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ரஷ்யா- உக்ரைன் இடையே பதற்றம்: சீன ஊடகங்களில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Feb 2022 1:42 PM GMT

உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய பல்வேறு செய்திகள் தற்போது உலகம் முழுதும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மேலும் போர் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தற்போது சமூக வலைதளங்கள் மிகப் பெரிய ஊடகங்களோ அமைந்திருக்கிறது. அந்த வகையில் சீனாவில் உள்ள மக்கள் இந்த பிரச்சினைகளைப் பற்றி மிகப்பெரிய அளவில் செய்திகளை பார்ப்பதால் தற்போது பிரபலமான ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.


திங்களன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் இரண்டாக பிரிந்த பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் சுதந்திரமான மண்டலமாக அங்கீகரித்தார். பின்னர், டான்பாஸ் பகுதியில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு புடின் உத்தரவிட்டார். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது தொடர்பாக சீனாவின் சமூக ஊடக தளமான Weibo ரஷ்யா மற்றும் உக்ரைன் பதட்டங்களில் ஒரு புதிய முன்னணியாக மாறியுள்ளது. ஏனெனில் சீன ஊடகங்களில் பெரும்பாலும் உக்ரைனில் என்ன நடக்கிறது? என்பது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுவதாக அங்குள்ள சமூக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.


இது சீன சமூக ஊடகங்களில் உக்ரைன் பிரச்சினை குறித்த விவாதத்தை அதிகாரிகள் அடக்க முயற்சிக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. "லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு" ஆகியவை சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளாக ரஷ்யாவின் திடீர் அறிவிப்பால், சீனாவுக்கான உக்ரைன் தூதரகம் சீன மொழியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன்பிறகு "உக்ரைன் பிரச்சினை" பரபரப்பான தலைப்பாக சீனாவில் மாறி சுமார் 900 மில்லியன் பார்வைகள் மற்றும் கிட்டத்தட்ட 200,000 விவாதங்களை கடந்ததாக சீன ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: The print News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News