தேசிய பாதுகாப்பு கவுன்சில் குறிப்புகளை புறக்கணிக்கக் கூடாது - பிரதமர் மோடி உத்தரவின் காரணம் என்ன?
தேசிய பாதுகாப்பு கவுன்சில் குறிப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்று பத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு.
By : Bharathi Latha
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. இந்த கூட்டம் ஐந்து மணி நேரம் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளுடன் அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுப்புகின்ற பின்னணி குறிப்புகள் மற்றும் தகவல்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடக்கூடாது.
அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கும் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தின் போது கொள்கை வகுக்கும் செயல்முறை ஆற்றல் வாய்ந்தது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அது மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கோடிட்டு காட்டியுள்ளார். குஜராத்தில் தான் முதல் மந்திரியாக இருந்த பொழுது, ஒரு குறிப்பிட்ட அமைச்சகம் தொடர்பாக சில விதிமுறைகளுக்கு பிற மாநிலங்களில் பெயரிடப் பட்டுள்ளதாகவும் தான் அதிகாரிகளின் சுட்டிக்காட்டிய, பின்னர் அவை மாற்றப்பட்டதாகவும் பிரதம மோடி சுட்டிக்காட்டியதாக அவர்கள் வெளியாகி இருக்கிறது.
கொள்கை வகுப்பதிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் உள்ள மெத்தனப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு கொள்கையை உருவாக்கும் பொழுதும் அவை இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Input & Image courtesy: News