Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டத்திற்கு புறம்பாக தகவல் சமூக ஊடகங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - எச்சரிக்கும் மத்திய அரசு!

சட்டத்திற்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை.

சட்டத்திற்கு புறம்பாக தகவல் சமூக ஊடகங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - எச்சரிக்கும் மத்திய அரசு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Dec 2022 9:05 AM GMT

பாராளுமன்ற மக்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சேகர் எழுத்துப்பூர்வமான அறிவிப்பு பதிவுதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகிறது. குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இணையதளத்தை பயன்படுத்துவோரின் சமூக ஊடக கணக்குகளின் சரிபார்ப்பு கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர்களின் பொறுப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் பொறுப்பற்ற முறையில் பொது வலைதளத்தில் சட்டத்திற்கு புறமான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மீண்டும் இதை உறுதி செய்வதற்கு தகவல் தொழில்நுட்பகுதிகள் 2021 நடைமுறைப்படுத்தப்பட்டது. இணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான பாதுகாப்பான நம்ப தகுந்த சமூக ஊடக கணக்குகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தற்பொழுது தகவல் தொழில்நுட்ப பகுதிகள் 2021 கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதன்படி பரிமாறப்படும் தகவல்களோ அல்லது தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ? தவறாக வழி நடத்தவோ?பதிவேற்றவோ? மாற்றவோ? அனுப்பவோ? போன்ற பொய்யான, தவறான நடவடிக்கைகளை வெளிநடத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் நலன், கண்ணியம், ஒழுங்கு மீறும் பொழுது தகவல் தொழில்நுட்பத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News