சைகை மூலமாக கலவர கும்பலை தூண்டி விடும் தி.மு.க எம்.எல்.ஏ! நேரலையில் கசிந்த வீடியோ ஆதாரம்
By : Kathir Webdesk
தமிழ்நாட்டுக்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்கிற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மக்கள் சபை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி, சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையிலுள்ள சர் பி.டி.தியாராயர் அரங்கத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பா.ஜ.க.வைச் சேர்ந்த இராம.ஸ்ரீநிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, 1968-ல் நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல் கேட்டதற்காக 43 தொழிலாளர்கள் ஒரே குடிசைக்குள் வைத்து கொளுத்தப்பட்டார்கள். இதை கண்டித்து அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது? 1978-ம் ஆண்டு விழுப்புரத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, தி.மு.க. என்ன செய்தது? 1995-ம் ஆண்டு கொடியங்குளத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அப்போது தி.மு.க. என்ன செய்தது?"இதையெல்லாம் மறந்து இன்று நரிக்குறவர் வீட்டுக்குச் சென்று கட்டிப் பிடித்தால் எல்லாம் சரியாகி விடுமா?" என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது திமுக எம்.எல்.ஏ. எழிலன் மேடையில் இருந்து சைகை காட்டியதும் திமுகவினர் எழுந்தது கூச்சலிட தொடங்கினர். ஏற்கனவே ஆட்களை செட் செய்துவிட்டு வந்து, எதிராக பேசினால் கலவரத்தில் ஈடுபடுமாறு கூறியதாக ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.