சாமி சிலையின் முழங்காலுக்கு அருகே குர்ஆன்... துர்கா பூஜையில் கோயில் நிர்வாக உறுப்பினரை அடித்தே கொன்ற "மர்ம நபர்கள்" !
வங்கதேசத்தில் துர்கா பூஜை விழாவில் வன்முறை
By : Muruganandham
வங்கதேசத்தில் இந்து - முஸ்லிம் மத பிரிவினரிடையே நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு ஆறாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமையன்று நடந்த துர்கை பூஜையின் போது, துர்கை சிலையின் முழங்காலுக்கு அருகே குர்ஆன் வைக்கப்பட்டிருப்பது போன்ற விடியோ வெளியானது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது.இதுகுறித்து உள்ளூர் காவல்துறையினர் கூறுகையில், துர்கா பூஜை திருவிழாவில் இந்துக்கள் கோயிலில் சடங்குகளை செய்து வந்துள்ளனர். அப்போது, 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். கோயில் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அடித்தே கொன்றுள்ளனர்" என்றார்.
கோயில் அருகே உள்ள குளத்தில் மற்றொரு இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரண்டு உயிரிழந்துள்ளனர். குற்றம் செய்தவர்களை கண்டிபிடிக்க முயற்சி செய்துவருகிறோம் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சர்ச்சையான விடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து, வங்கதேசத்தில் உள்ள 12க்கும் மாவட்டங்களில் இந்துக்களை குறிவைத்து வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஹாஜிகஞ்சில் இந்து கோயிலில் தாக்குதல் நடத்திய 500 பேர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் குறைந்தது 150 இந்துக்கள் காயமடைந்திருப்பதாக இந்து மத தலைவர் கோபிந்தா சந்திர பிரமானிக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, குறைந்தது 80 தற்காலிக கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.