ஈரோடு அரசு மருத்துவமனை ஊதிய மறுப்பு - ஊழியர் பணிகளை புறக்கணித்து போராட்டம்!
ஊதியத்தை, தரமறுப்பதாக கூறி ஈரோடு அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்.
By : Bharathi Latha
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணி இடங்கள் நிரப்புப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே அரசு நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் தர மறுப்பதாக கூறி, ஈரோடு அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து தற்போது போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த ஒப்பந்த நிறுவனத்திடம் அரசு சார்பில் 132 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களிடம் அரசு மாதம் ரூபாய் 21,000 ஊதியமாக வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது.
ஆனால் தனியார் ஒப்பந்த நிறுவனம் வெறும் 8,500 மட்டுமே மாத ஊதியமாக வழங்கி வந்தது. ஈரோடு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலாளர்கள் போன்ற பல்வேறு பணியில் ஈடுபட்டு வந்த நபர்கள் தான் தற்பொழுது இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு வர வேண்டிய உதியத்தொகை இன்னும் வரவில்லை என்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் தற்பொழுது போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
மருத்துவமனை வெளிவளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தி.மு.க அரசின் அலட்சியப் போக்கு காரணமாக இது ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அரசு தங்களை கண்டு கொள்ளவில்லை தங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News J