பயிர்களைக் காக்கும் முயற்சி: விவசாயி புதிய கண்டுபிடிப்பு !
பயிர்களை பறவைகளிடம் இருந்து காக்கும் முயற்சியில் விவசாயி புதிய கண்டுபிடிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
By : Bharathi Latha
இந்திய நகரங்களில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக கடைகளில் இருந்து விவசாய பொருட்கள் வீட்டிற்கு வருகிறது. ஆனால் ஒரு விவசாயிக்கு மட்டும்தான் தெரியும்? விவசாய பொருட்கள் எவ்வளவு தடைகளுக்குப் பிறகு அறுவடை செய்து, சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது. அதிலும் குறிப்பாக அந்தப் பயிர்கள் வளரும் காலத்தில் பூச்சிகள், எலிகள், பறவைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அந்த வகையில் தற்போது சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, பறவைகளே பெரும் ஆபத்தாக இருக்கிறது. விளைச்சலுக்காக விதைக்கப்பட்ட பயிர்களினால் ஏற்படும் இந்த சேதம், வணிகரீதியில் பெருத்த அடியை விவசாயிகளுக்கு கொடுக்கும். இதனால், காலம்காலமாக, பயிர்களை பறவைகளிடம் இருந்து காப்பதற்காக வித்தியாசமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
பறவைகளை விரட்ட ஒரு விவசாயி மேற்கொண்டு புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. சோளம் பயிரிடப்பட்டுள்ள அந்த வயலில், மின்விசிறியின் மோட்டாரில் சங்கிலியை இணைத்துள்ளார். அந்த சங்கிலி, வேகமாக சுழலும்போது அருகே வைக்கப்பட்டுள்ள அலுமினிய கப் மீது மோதி பலத்த சத்தத்தை எலுப்புகிறது. பறவைகளுக்கு சத்தம் என்றால் எரிச்சலடைபவை என்பதால், அவரின் இந்த டெக்னிக்குக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பறவைகளுக்கும் துன்பம் இழைக்காமல், பயிர்களையும் காக்கும் வகையில் இந்த காலத்துக்கு ஏற்ற டெக்னிக்கை அவர் கையாண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அதிகமாக வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்டாக விவசாயி ஒருவர் சிந்தித்து செயல்படுத்தியிருக்கும் இந்த ஐடியா உண்மையில் பாராட்டப்பட வேண்டும் என்று பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Input & Image courtesy:India