Kathir News
Begin typing your search above and press return to search.

தேவாலயங்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் - சிறுவர்களையும் விட்டுவைக்காத மத குருமார்கள் !

French report: 330,000 children victims of church sex abuse

தேவாலயங்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் - சிறுவர்களையும் விட்டுவைக்காத மத குருமார்கள் !
X

MuruganandhamBy : Muruganandham

  |  6 Oct 2021 3:16 AM GMT

பிரான்ஸ் நாட்டில் உள்ள தேவாலயங்களில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கை தற்போது பிரான்ஸ் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

கடந்த 60வருடங்களுக்கு மேலாக இந்த கொடூரம் அங்கு அரங்கேறி வந்ததாக Jean-Marc Sauveதலைமையில் இந்த விசாரணை நடைபெற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய சுமார் 3000 பேர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேல் மத குருமார்கள் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். மீதி பிற ஊழியர்களால் அரங்கேற்றப்பட்டவை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் சிறுவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை ஆண்டு காலம் இது குறித்த விசாரணை நடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், தேவாலயம், போலீஸ், பத்திரிகை செய்திகள் மாதிரியான தரவுகளை சேர்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஹாட் லைன் எண் மூலமாகவும் பாதிக்கப்பட்ட 6500 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News