Kathir News
Begin typing your search above and press return to search.

கோவா: இந்து மதத்தை இழிவுபடுத்திய பேராசிரியை மீது வழக்கு பதிவு.!

கோவா: இந்து மதத்தை இழிவுபடுத்திய பேராசிரியை மீது வழக்கு பதிவு.!

கோவா: இந்து மதத்தை இழிவுபடுத்திய பேராசிரியை மீது வழக்கு பதிவு.!

Shiva VBy : Shiva V

  |  10 Nov 2020 9:05 AM GMT

இந்து மதத்தை அவமரியாதை செய்யும் நோக்கில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவுகளை இட்டு வந்த கோவா சட்டக்கல்லூரி பெண் பேராசிரியை மீது காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனது பேஸ்புக் பக்கத்தில் அனைவரும் பார்க்கும் விதமாக தொடர்ந்து இந்து மதத்தைப் பற்றி தவறான பதிவுகளை இட்டு வந்துள்ளதாக ரவி ஜா என்பவர் பனாஜி காவல் நிலையத்தில் ஷில்பா சுரேந்திர பிரதாப் சிங் என்ற சட்டக் கல்லூரி பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் ஷில்பா தனது முகநூல் பக்கத்தில் இந்து மதத்தில் நிலவும் பழமையான நம்பிக்கைகளை சீர்குலைக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


மேலும் இதுபோன்ற பதிவுகள் தன்னை மிகவும் பாதித்தது என்றும் இதனால் இந்து மதத்தைப் பற்றி தவறாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷில்பா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்து பெண்கள் தாலி அணிவது பற்றியும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது பற்றியும் அவர் இழிவாகப் பதிவிட்டதாகத் தெரிகிறது.

அதே போல் ஆன்லைன் வகுப்புகளின் போது பாடத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மனு ஸ்மிருதியைப் பற்றி அவர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களைக் கூறியதாகவும் இளம் மாணவர்கள் மனதில் வன்மத்தை விதைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷில்பாவும் ரவி ஜாவுக்கு எதிராக வடக்கு கோவாவில் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ரவி ஜா தனது பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் விதமான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டு வந்துள்ளதாகவும் மேலும் தன் மீது வன்முறையில் ஈடுபடத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இரண்டு நிமிடப் புகழுக்காக வேண்டுமென்றே இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசுவதும் பின்னர் தங்களுக்கு மிரட்டல் விடப்படுவதாக அலறுவதும் இப்பொழுது பலருக்கு வாடிக்கையாகி விட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News