தங்கத்தால் செய்யப்படும் கொழுக்கட்டை: பண்டிகை காலத்தில் மக்களிடம் அதிக வரவேற்பு !
தங்கத்தால் செய்யப்படுகின்ற கொழுக்கட்டைப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By : Bharathi Latha
சமூக வலைதளங்களில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியும் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறுகிறது. அந்த வகையில் தற்போது தங்கத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டை பற்றிய தகவல்கள் தான் நிறைய பகிரப்படுகின்றனர் . நாசிக்கில் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ் பண்டிகை காலங்களில் புதுவிதமான விற்பனைக்கு வரும். அதில் சில வித்தியாசமான முறையில் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஒரு சுவாரஸ்யமான ஸ்வீட் தான் நாசிக் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாசிக் நகரில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யப்பட்ட விருப்பமான ஸ்வீட் வகையான கொழுக்கட்டை ஒரு கிலோவுக்கு 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அப்படி இதில் என ஸ்பெஷல் என கேள்வி எழுகிறதா? இந்த கொழுக்கட்டையில் சாப்பிடக்கூடிய தங்கம் சேர்க்கப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு 21 கொழுக்கட்டைகள் படைத்தது வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது இந்த ஸ்வீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கடை உரிமையாளர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சாகர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் தீபக் சவுத்ரி கூறுகையில், "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 25 வகையான ஸ்வீட்ஸ்களை தங்கள் கடையில் தயார் செய்து விற்பனை செய்தததாகவும், அதில் இந்த தங்க கொழுக்கட்டை மட்டுமின்றி, வெள்ளியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை அடங்கும் என கூறியுள்ளார். மேலும் தங்க கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின்விலை அதிகம் என்றும்"அவர் கூறுகிறார்.
Input & Image courtesy:News 18